--- --:--:-- --

தீவிரமாக உருவெடுத்தது அசானி புயல்..!

4

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான அசானி புயல் தீவிரமடைந்து இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்பொழுது புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

16 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயல் விசாகப்பட்டினத்தில் இருந்து 970 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும் தீவிர புயலாக உருமாறி வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon