--- --:--:-- --

மனைவிக்கு சமாதி கட்டிய கணவன்..!

9

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து தனது உறவினர்களுக்கு சமாதி கட்டிய ஊராட்சி மன்ற தலைவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே சேமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக பதவி வகித்து வரும் நிலையில் விவசாய நிலம் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து குற்றச் சாட்டை வைத்துள்ளது.

 

அந்த நிலத்தில் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கும் பளிங்கு கற்களால் சமாதிகளை கட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon