சமையல் சிலிண்டருக்கான மானியம் எங்கே? என கேட்கும் ராகுல் காந்தி
சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்த்தப்படுவதை தடுக்க காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
அதிக வேலைவாய்ப்பு திண்டாட்டம் மற்றும் மோசமான நிறுவனங்களால் மக்கள் ஏற்கனவே பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாகவும் இந்த சூழ்நிலையில் சமையல் எரிவாயு உருளையின் விலை மேலும் 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது அவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2014ஆம் ஆண்டு மானிய விலையில் சமையல் எரிவாயு உருளை வழங்கியது போல தற்பொழுதும் வழங்க வேண்டும் என்றும் இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தவர்கள் 414 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் தற்பொழுது ஆயிரம் ரூபாயை கடந்து விட்டது என்றும் இதில் எங்கே மானியம் இருக்கிறது என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





