--- --:--:-- --

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

9

ந்தமானில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அந்தமான் ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

 

வடமேற்கு திசையில் நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

 

குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும், இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon