--- --:--:-- --

கூலித்தொழிலாளியின் வீட்டிற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம்..!

6

வேலூரில் கூலி தொழிலாளியின் வீட்டிற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மின் கட்டண உயர்வு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கூலித்தொழிலாளி ராணியம்மா.

 

இவரது வீட்டில் மூன்று பேர் மட்டுமே வசித்து வரும் நிலையில் வழக்கமாக 300 ரூபாய் வரை மட்டுமே மின்கட்டணம் வரும் என்று கூறப்படுகிறது. இந்த மாத காலம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வந்ததால் அதிர்ச்சி அடைந்த ராணி அம்மாள் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தார்.

 

இதையடுத்து புதிய மீட்டரை வைத்துவிட்டு மின்வாரிய ஊழியர்கள் பழைய மீட்டரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

 

Right Menu Icon