--- --:--:-- --

தேர்வு அறையில் மாணவிக்கு திடீரென வாந்தி தலை சுற்றல்..!

5

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிக்கு திடீரென வாந்தி தலைசுற்றல் ஏற்பட்டதால் தேர்வு அறையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

நெல்லூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் வித்தியா என்ற மாணவி தேர்வு எழுதிக் கொண்டிருந்த பொழுது அவருக்கு வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டது.

 

உடனே இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லூர்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து மாணவி தொடர்ந்து தேர்வு எழுதினார்.

 

Right Menu Icon