பொது இடங்களில் புர்காவை கழட்டினால் கடுமையாக தாக்கப்படுவார்கள் என மிரட்டல்..!
இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களில் புர்காவை கழட்டினால் கடுமையாக தாக்கப்படுவார்கள் என வாட்ஸ்அப் குரூப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பூதாகரமானதையடுத்து மாநிலத்தில் உள்ள சில இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் மதத்தை சேர்ந்த பெண்களை கட்டாயம் புர்கா ஹிஜாப் அணிய வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் குழு ஒன்று அண்மையில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அதில் மங்களூருவில் உள்ள வணிக வளாகங்களுக்கு செல்லும் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிந்தபடி சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அவர்களை ஏற்கனவே எச்சரித்து அனுப்பி இருக்கிறோம் எனவும் இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை பார்த்தால் அவர்கள் அங்கேயே தாக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இஸ்லாம் பெண்களின் பெற்றோர் தங்கள் மகள் கல்லூரிகளுக்கு செல்லும் பொழுதும் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது அவர்களை கண்காணிக்க வேண்டும் எனவும் ஒருவேளை உங்கள் மகள் பொது இடங்களில் புர்கா அணியாமல் இருந்தால் அவர்கள் தாக்கப்படுவது உறுதி எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த மங்களூர் காவல் ஆணையர் சுஷில்குமார் சம்பந்தப்பட்ட வாட்ஸ் அப் குழுக்களில் விடுக்கப்பட்ட மிரட்டல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.





