சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்..!
பெரம்பலூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 55 மாணவர்கள் 36 மாணவிகள் என மொத்தம் 87 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.
இன்று மதியம் 73 பேருக்கு சத்துணவு சாப்பிட்ட வழங்கப்பட்ட நிலையில் சத்துணவு சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் பெரம்பலூர் ஆர்டிஓ மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவர்கள் உடல் நலம் விசாரித்தார். மேலும் உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் ஒன்பது மாணவர்களும் நலம் பெற்று வீடு திரும்பினார்.
இதனையடுத்து செங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொது சுகாதாரத்துறை மூலம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு சத்துணவு சாப்பிட்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.





