திருமண நிகழ்ச்சியில் நிஜ பாம்பு வந்ததால் பரபரப்பு.!
ஒடிசாவில் திருமணத்தின் பொழுது பாம்பை உபயோகித்த நபரை போலீசார் கைது செய்தனர். மயூர்பஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கிருந்த பாம்பாட்டி ஒருவர் உண்மையான பாம்பை பயன்படுத்தி நடனமாடினார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் பாம்பாட்டியை கைது செய்ததுடன் நாக பாம்பை பத்திரமாக மீட்டனர்.





