3வயது சிறுமியை இழுத்துச் செல்லும் குரங்கு… !
பொதுவாக பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட பல்வேறு இனங்கள் தங்கள் வாழ்வதற்கு ஏற்ப இடங்களை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விலங்குகளில் மனிதர்களை போலவே இருப்பவை குரங்குகள் .
இவை மனதில் செல்லும் அனைத்து விதமான செயல்களையும் செய்யக் கூடியது மற்றும் சுட்டித்தனம் நிறைந்த விளையாட்டுகளையும் செய்யக்கூடியது. சில சமயங்களில் காட்டு விலங்குகள், மனிதர்கள் மற்றும் குரங்குகளும் தாக்குதல்களை நடத்துகின்றன.
சீனாவில் காட்டு குரங்கு 3 வயது சிறுமியை அடித்து இழுத்துச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிறுமியின் பின்னால் சப்தமில்லாமல் வந்த காட்டு குரங்கு ஒன்று சிறுமியை தாக்கிய ஒரு பொம்மை போன்று இழுத்துச் செல்வது போல இழுத்துச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. குழந்தையை இழுத்துச் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர் துரிதமாக வந்து குரங்கிடம் இருந்து சிறுமியை காப்பாற்றி உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





