பைக் மீது மற்றொரு பைக் மோதி கோர விபத்து..!
தர்மபுரி மாவட்டத்தில் பைக் மீது மற்றொரு பைக் மோதியதில் பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தர்மபுரி அருகே செந்தில் நகர் பகுதியில் மூர்த்தி என்பவர் தனது நண்பர் ராம்குமார் என்பவருடன் சேர்ந்து மளிகை சாமான் வாங்கி வீட்டிற்கு திரும்பினார்.
அப்பொழுது தருமபுரி நிலையத்தில் சாலையை கடக்க முயன்ற பொழுது எதிரில் அதிவேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





