--- --:--:-- --

ஓடும் பேருந்தில் இருந்து மாணவன் கீழே விழும் காட்சி..!

3

தென்காசியில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் சாலையில் தவறி விழுந்த பரபரப்பான வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புலியரை பகுதியிலிருந்து ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் நாள்தோறும் செங்கோட்டைக்கு சென்று வருகின்றனர்.

 

இந்த நிலையில் இன்று காலை புளியரையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற பேருந்தில் மாணவ-மாணவிகள் பயணித்தனர். தனியார் பேருந்தின் மையப்பகுதியில் இடமிருந்தும் சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி இருந்தனர். பேருந்து நிறுத்தம் அருகே செல்லும் பொழுது படிக்கட்டில் தொங்கிய மாணவர்களில் சிலர் தவறி விழுந்தனர்.

 

ஆனால் அவர் பின்னால் வந்த வாகனங்களில் இருந்து நல்வாய்ப்பாக உயிர்தப்பினார். இது தொடர்பாக பரபரப்பான வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon