சிறையில் இருந்து வந்த பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை..!
சென்னை புதுவண்ணாரப்பேட்டை முன்விரோதம் காரணமாக ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தண்டையார்பேட்டை சேர்ந்த ஜீவன்குமார் என்பவர் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஜீவன்குமாரை வழிமறித்து 5 பேர் கொண்ட கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றது. ரத்த வெள்ளத்தில் சென்றவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதிமுக நிர்வாகி இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவரை அரிவாளால் வெட்டிய புகாரில் ஜீவன் குமார் சிறை சென்று வெளியே வந்த நிலையில் 5 பேர் கொண்ட கும்பல் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





