நைஜீரியாவில் படகு விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 26 பேர் உயிரிழப்பு..!
நைஜீரியா நாட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் வடமேற்கே ஜொகோட்டோ மாகாணத்தில் உள்ள ஆற்றில் மரப்படகு ஒன்று சென்று கொண்டிருந்தது.
பதியாவா என்ற கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த படகு எதிர்பாராதவிதமாக ஒரு மரத்தின் மீது மோதி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் உள்ளூர் நீச்சல் வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுவரை இரு பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் என 26பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எத்தனை பயணிகள் இறந்தனர் என்பது உறுதியாக தெரியாததால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.





