--- --:--:-- --

நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மழை..!

1

கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் எனவும் தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வரும் 15ஆம் தேதி தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

16, 17 ஆகிய தேதிகளில் தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Right Menu Icon