--- --:--:-- --

TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுமா..?

2

குதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. இதற்காக இளநிலை கல்வியியல் படித்தவர்களும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.

 

விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்ற நிலையில் பலருக்கு ஓடிபி வருவதில் சிக்கல் உள்ளதாக புகார் வந்துள்ளது. மேலும் இளநிலை கல்வியில் முடித்தவர்களுக்கான அத்தாட்சி சான்றிதழும் செவ்வாய்க்கிழமை தான் கிடைத்ததாக கூறப்படுகிறது.

 

எனவே தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பலர் இணையதளம் வாயிலாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon