சென்னையில் மாயமான மாணவி மதுரையில் சடலமாக மீட்பு..!
சென்னையில் மாயமான பள்ளி மாணவி மதுரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில் என்பவரின் மகள் திவ்யதர்ஷினி. 15 வயதான இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இதனிடைய தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பெற்றோர் திட்டியதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த திவ்யதர்ஷினி வீட்டை விட்டு வெளியேறி மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். இதன் நடுவே அவர் அங்கு உள்ள கட்டிடம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பெற்றோர் தன்னை திட்டியதால் தற்கொலை செய்து கொள்வதாக கூறிய கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை விட்டதாக கூறப்படும் நிலையில் சந்தேக மரணம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





