--- --:--:-- --

ஆசிரியர் பாடம் நடத்தும் போது செல்போனில் IPL பார்த்த மாணவர்கள்..!

2

ழனியில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் மாணவர்களில் சிலர் படுத்து உறங்குவதாகவும், செல்போனில் கிரிக்கெட் போட்டி பார்ப்பதுமாக ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த வீடியோ தொடர்பாக கல்லூரி தரப்பில் விசாரித்த பொழுது பாடம் நடத்துபவர் செவித்திறன் குறைபாடு கொண்ட ஆசிரியர் என்றும் கடந்த வாரம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

 

வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் வகுப்பறைக்கு இனி செல்போன்கள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி எடுத்து வரப்படும் செல்போன்கள் ஆசிரியர்களால் பறிமுதல் செய்து வைக்கப்படுகின்றன எனவும் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 

Right Menu Icon