விருது கிடைக்காததால் வருத்தமடைந்த காற்றுக்கென்ன வேலி டீம்..!
விஜய்யில் சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது விழா நடைபெற்றது. அதில் Fiction-Non Fiction என்று இரண்டு வகையில் விருதுகள் கொடுக்கப்பட்டன.
விருது கொடுக்கப்பட்டதில் ரசிகர்களுக்கு வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் சில கருத்துக்கள் உள்ளன, விஜய் தொலைக்காட்சியும் எந்த அடிப்படையில் விருதுகள் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.
காற்றுக்கென்ன வேலி தொடர் இளைஞர்களை கவர்ந்த ஒரு தொடர். இந்த தொடருக்கு விருது விழாவில் ஒரு விருது கூட கிடைக்கவில்லை, இது தொடர் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இதில் மரகதம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகையும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




