முன்னாள் மனைவி மீது டி. இமான் புகார்..!
குழந்தைகளின் பாஸ்போர்ட்டை மறைத்து புதிய பாஸ்போர்ட் வாங்க முயன்றதாக கூறி முன்னாள் மனைவி மோனிகா மீது பிரபல இசையமைப்பாளர் இமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற இசையமைப்பாளர் இமானுக்கு குழந்தைகளை சந்திக்க குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இரண்டு குழந்தைகளில் பாஸ்போர்ட்டையும் இமான் வைத்திருந்த நிலையில் மனைவி குழந்தைகளின் பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக கூறி புதிய பாஸ்போர்ட் பெற முயற்சித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, இமானின் மனைவி மோனிகா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





