12ஆம் வகுப்பு இரண்டாவது திருப்புதல் தேர்வுக்கான கணித வினாத்தாள் லீக்கானது..!
இரண்டாம் திருப்புதல் தேர்வு நாளை நடைபெறவிருந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் கசிந்துள்ளது. இரண்டாம் திருப்புதல் தேர்வில் வினாத்தாள் கசிவுக்கு இடம் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை கூறியிருந்த நிலையில் சமூக வலைதளங்களில் திருப்புதல் தேர்வு கசிந்துள்ளது.
நாளை நடைபெறவிருந்த பன்னிரண்டாம் வகுப்பு கணித பாடத்திற்காக தயாரிக்கப்பட்டிருந்த இரண்டு வகையான வினாத்தாள்களும் வெளியாகியுள்ளது.





