அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி..!
பெரம்பலூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலியானது. பெரம்பலூர் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற மானை அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. நிகழ்விடத்திலேயே புள்ளிமான் உயிரிழந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். பெரம்பலூர் வனச்சரக தலைமையில் சென்ற குழுவினர் உயிரிழந்த மானை கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்துவிட்டு அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் புதைத்தனர்.






