--- --:--:-- --

குளத்தில் விஷம் கலந்த மர்ம நபர்கள்.. செத்து மிதக்கும் மீன்கள்..!

2

யிலாடுதுறை மாவட்டம் செங்குடியில் உள்ள அரசு குளத்தில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் நிலையில் மர்மநபர்கள் குளத்தில் விஷம் கலந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.

 

செங்கொடி தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான அரசு நிலத்தை இருவர் குத்தகைக்கு எடுத்து பல்வேறு வகையான மீன்கள் மற்றும் இறால்களை வளர்த்து வந்தனர். நேற்று காலை முதல் குளத்திலிருந்து மீன்கள், இறால்கள், பாம்பு உள்ளிட்டவை இறந்து கரை ஒதுங்கியதால் கடும் துர்நாற்றம் வீசியது.

 

அவற்றை அகற்றிய குத்தகைதாரர் குளத்தில் விஷம் கலந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்த குளத்திலிருந்த தண்ணீரையும், இறால், மீன்களையும் தஞ்சாவூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் தொழில் முனைவு மற்றும் வேளாண்மைத் துறைக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.

 

Right Menu Icon