மாணவர்களிடம் பணம் வசூலிக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி..!
அரசு இலவசமாக கல்வியை வழங்கும் நிலையிலும் பராமரிப்பு என்ற பெயரில் அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் பணம் வசூல் செய்தது தெரியவந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் ஏழை எளிய மக்களே தங்களது பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்கின்றனர்.
ஆனால் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அந்த மாணவர்களிடம் அரசு விதிகளை மீறி பணம் வசூலிப்பதாக தகவல் வந்ததையடுத்து அது குறித்து கேட்ட போது விடைத்தாள் செலவு, கழிவறை சுத்தம் செய்ய, குடிநீர் வழங்க என மாணவர்களிடம் பணம் வசூல் செய்வதை அந்த பள்ளியில் ஆசிரியர்களை ஒப்புக்கொண்டனர்.






