முதல்வர் துபாய் பயணம் : 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
முதலமைச்சரின் துபாய் அபுதாபி பயணத்தின் பொழுது ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இரும்பு தளவாடங்கள் சார்ந்த நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக முதலமைச்சர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஜவுளித் துறையை சார்ந்த ஒயிட் ஹவுஸ் நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவத் துறையை சார்ந்த எஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் மதிப்பிலும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக முதல் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
உணவுத் துறையை சேர்ந்த ட்ரான்ஸ்வேர்ல்டு நிறுவனத்தோடு 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.
சரக்கு போக்குவரத்து துறையை சார்ந்த நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் மதிப்பில் தொழில் மற்றும் கட்டுமானத் துறையை சேர்ந்த 100 நிறுவனத்தோடு 3,500 கோடி ரூபாய் மதிப்பிடும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
6,100 கோடி ரூபாய் மதிப்புள்ள 6 ஒப்பந்தங்கள் மூலம் 14 ஆயிரத்து 700 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.






