முதல்வர் குறித்த தவறான கருத்தால் பாஜக பிரமுகர் கைது.!
முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து தவறான தகவல்களை தெரிவித்ததாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணியை சேர்ந்த அருள் என்பவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் துபாய் சென்ற பொழுது அவர் அணிந்திருந்த உடை 17 கோடி ரூபாய் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் விதமாக கருத்தை பதிவிட்டுருப்பதாகவும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திமுக இளைஞரணி அமைப்பாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தவறான கருத்தை பரப்புதல், அவப்பெயரை ஏற்படுத்தல் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






