--- --:--:-- --

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு..!

5

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

தமிழக மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon