2 நாட்கள் அரசு பேருந்துகள் ஓடாது..!
வேலைநிறுத்தத்தின் போது பேருந்துகள் இயங்குமா என்ற கேள்விக்கு தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. பொது வேலைநிறுத்தத்தின் போது பேருந்துகள் வழக்கம் போல் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.
மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதனை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆதரிக்கின்றனர்.
இந்த போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கும் அதே நேரத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டம் நடக்கும் 2 நாட்களும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






