தினமும் கோயிலில் மணி அடிக்கும் ஆடு..!
அம்மன் கோயிலில் நாள்தோறும் 10 நிமிடம் ஆடு மணி அடிப்பதை காண பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து சென்றபடி உள்ளனர்.ஆடு அங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள மணியை அடிக்கும், வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவிலின் தூணில் மணி கயிற்றால் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றை ஆடு தனது தலையால் முட்டியும், காலால் மாட்டி இழுத்தும் மணியை அடிக்கும் இந்த அதிசய காட்சியை பார்த்து பலர் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.






