மார்ச் 28 முதல் மீண்டும் முழு ஊரடங்கு..?
சீனாவில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவிய கோவிட் – 19 எனப்படும் கொரோனா தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளை கடுமையாக பாதித்து விட்டது.
கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவது, நெதர்லாந்து சுகாதாரத் துறையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதை அடுத்து ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக, பிரதமர் மார்க் ரூட்டேவுடன், சுகாதாரத் துறை அதிகாரிகள் விரைவில் ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், ஊரடங்கில் கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






