நித்யானந்தா மீது மீண்டும் பாலியல் புகார்..!
சாமியார் நித்யானந்தா மீது கனடாவை சேர்ந்த முன்னாள் சிஷ்யை ஒருவர் கர்நாடக போலீசாரிடம் பாலியல் புகார் அளித்திருக்கிறார். கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் நித்தியானந்தாவிற்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது.
இந்நிலையில் பெங்களூரு ராம்நகர் முன்னாள் சிஷ்யை மின்னஞ்சல் மூலம் அளித்த புகாரில் நித்யானந்தா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய தாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்ட புகாரை ஏற்க மறுத்த போலீசார் எந்த அச்சமுமின்றி இந்தியாவில் ஏதாவது ஒரு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தினர்.





