துபாய் சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!
முதலமைச்சர் மு க ஸ்டாலின் 4 நாள் அரசு முறை பயணமாக துபாய் சென்றடைந்தார். துபாயில் நடைபெற்று வரும் உலகக் கண்காட்சியில் இன்று முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரங்கை திறந்து வைப்பதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று இரவு துபாய் சென்றடைந்தார். அவர்களை இந்திய தூதரகம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் வரவேற்றனர். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் வழியனுப்பி வைத்தனர்.
முதலமைச்சர் தலைமையிலான இந்தக் குழுவில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அரசு அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். தொடர்ந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.





