--- --:--:-- --

ஆசிரியை திட்டியதால் 11 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை..!

6

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஆசிரியை கண்டித்ததால் பதினோராம் வகுப்பு மாணவன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தண்ணீர்பந்தல் பாளையம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்த மாணவர் ஒருவரை காலை 10 மணியளவில் ஆசிரியை திட்டி வகுப்பிற்கு வெளியே நிற்க வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவர் பள்ளிக்கு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது.

 

தகவல் அறிந்து அங்கு வந்த பெற்றோரும் கிராம மக்களும் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவனின் மரணத்திற்கு காரணம் தெரியாமல் எந்த ஆசிரியரும் வெளியேறக்கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர்.

 

சம்பவம் தொடர்பாக டிஎஸ்பி மற்றும் காவலர்கள் கிராம மக்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon