ஐடிஐ, பாலிடெக்னிக் மாணவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி..!
பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக் ஐடிஐ படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு நேரடியாக ஐடிஐ அல்லது டிப்ளமோ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு இந்த திட்டம் பொருந்துமா என கேள்வி எழுந்த நிலையில் அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் சட்டப்பேரவையில் அளித்திருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





