தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு வருமா..?
தற்பொழுது சீனா முதலிய நாடுகளில் கொரொனா தொற்று பரவிவரும் நிலையில் தமிழகத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 33 ஆயிரத்து 536 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 23 பேரும், பெண்கள் 29 பேர் உட்பட மொத்தம் 52 பேருக்கு புதிதாக கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 19 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் தடுப்பூசிகளை செலுத்திகொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்த கட்டுப்பாடு தளர்வுகள் மாதம் இறுதி வரையில் நடைமுறையில் இருக்கும் இந்த சூழலில் முதல்வர் கொரொனா கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் அடிப்படையில் புதிய கட்டுப்பாடுகள் அல்லது தளர்வுகள் குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





