--- --:--:-- --

பேருந்தில் மோதி தூக்கி வீசப்பட்ட மான்..!

5

துரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலையில் இருந்து ஓடி வந்த புள்ளிமான் பேருந்தில் மோதி தூக்கி வீசப்படும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தூர் மலையில் நேற்று மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

 

இதனால் அங்கிருந்த ஒரு புள்ளி மான் மலையடிவாரத்தில் இறங்கி அந்த சாலையை கடக்க முயன்ற பொழுது அந்த வழியாக வந்த பேருந்து மோதி தூக்கி வீசப்பட்டது. இந்நிலையில் எழுந்து ஓடிய புள்ளிமான் சிறிது தூரத்தில் கீழே விழுந்து உயிரிழந்தது.

 

வனத்துறையினர் வனப்பகுதியில் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon