நடிகர் பிரபாசுக்கு அறுவை சிகிச்சை..!.
பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான பிரபாஸுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் தெலுங்கு படத்தில் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது எதிர்பாராதவிதமாக பிரபாஸுக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியும் அவர் சிகிச்சை மேற்கொள்ளாமல் படத்தில் நடித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டதாக கூறப்படும் சூழலில் அவரை அறுவை சிகிச்சைக்காக ஸ்பெயின் அழைத்துச் சென்றுள்ளனர்.





