--- --:--:-- --

மாணவர்களால் அச்சுறுத்தல் ஏற்படுவதாக ஆசிரியர்கள் புகார்..!

5

தேனி மாவட்டத்தில் மாணவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக மூன்று பகுதிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். தேவதானப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவன் ஒருவன் தன்னை கத்தியால் குத்த முயற்சி செய்ததாக ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

பெரிய குளத்திற்கு அருகே ஜி கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசுவதாக ஆசிரியர்கள் புகார் அளித்துள்ளனர். அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவரை பள்ளி வகுப்பறையில் மாணவன் ஒருவர் மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

 

இந்த மூன்று பகுதிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு மாணவர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்கக்கோரி அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon