--- --:--:-- --

கீழேபோட்ட எலும்புகளை பயன்படுத்தும் சூப்கடைக்காரர்..!

3

சென்னை அடுத்த காரபாக்கத்தில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுவிட்டு கீழே போட்டு விட்டு சென்ற எலும்புகளை சூப் கடைக்காரர் மீண்டும் சூப்பில் பயன்படுத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை அடுத்த காரப்பாக்கம் நடைமேடை மேம்பாலம் அருகே சாலையோரம் ஒருவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக சூப் கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சூப் குடிடுத்துவிட்டு எலும்பு துண்டுகளை கீழே போட்டுவிட்டு செல்கின்றனர்.

 

சிறிது நேரம் கழித்து ஆள் இல்லாத நேரம் பார்த்து சூப் எலும்புத் துண்டுகளை எடுத்து தண்ணீரில் கழுவி விட்டு மிக்ஸியில் போட்டு விற்பனை செய்கிறார். அனைத்து வீடியோவும் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது.

 

இது போன்ற உணவு பொருட்களை உட்கொள்வதால் உடல் நலம் பாதிக்கும் அபாயம் உள்ளதால் அந்தக் கடைக்காரர் மீது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

Right Menu Icon