ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்..!
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டு தாய், மகன் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பரமசிவம், சிவதேவி தம்பதி தங்களது மகன் கோவிந்தன் உட்பட உறவினர்கள் உடன் காரில் கொடிவேரி அணைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
வீடு திரும்பும் வழியில் கூளக்கரை கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்ற தண்ணீரை பார்த்ததும் ஆர்வக்கோளாறில் கோவிந்தன் வண்டியை நிறுத்த சொல்லி இறங்கி சென்று குளிக்க முயன்றுள்ளார். அப்பொழுது அவர் தண்ணீரில் வேகத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளார்.
பதறிப் போன அவரது தாய் சிவதேவியும், அவருடன் உடன் சென்ற உறவுக்காரப் பெண்ணான ஷியாமிலி என்ற கல்லூரி மாணவியும் கோவிந்தனை காப்பாற்ற தண்ணீரில் குதித்துள்ளனர். ஆனால் மூன்று பேருமே நீரின் வேகத்தை எதிர் கொள்ள முடியாமல் அடித்து செல்லப்பட்ட பரிதாபமாக உயிரிழந்தனர்.





