--- --:--:-- --

ரயிலுக்கு அடியில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!

1

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ரயிலடியில் புனித செல்போனை எடுக்க சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் மீது ரயில் ஏறி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பாரதிராஜா என்பவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

 

ரயிலில் சென்றுக் கொண்டிருந்த பொழுது பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் அவரது செல்போன் தவறி கீழே விழுந்தது. அதனை எடுக்க நின்றுகொண்டிருந்தவர் ரயிலுக்கு அடியில் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக ரயில் புறப்பட்டது.

 

ரயில் சக்கரத்தில் சிக்கி பாரதிராஜா உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon