நடிகர் சங்கத் தேர்தல்: வரும் 20 ஆம்தேதி வாக்கு எண்ணிக்கை
நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைவரும் 20ஆம் தேதி நடைபெறும் என ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் 2019 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பாதிக்கப்பட்டதாக ஏழுமலை பெஞ்சமின் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் இறுதித் தீர்ப்பு வரும்வரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண தடை விதித்தனர்.
இதனால் தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மநாபன் பதிவான வாக்கு சீட்டுகளை நுங்கம்பாக்கத்தில் தனியார் வங்கி லாக்கரில் பத்திரப்படுத்தினார்.
சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் கடந்த 23ஆம் தேதி உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்றம் 3 வார காலத்தில் எண்ணிக்கையை நடத்த உத்தரவிட்டது. இதன்படி நுங்கம்பாக்கத்தில் உள்ள வரும் 20ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






