காதல் திருமணம் செய்து வரதட்சணை கொடுமை செய்த இளைஞர்..!
கடலூர் அருகே வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கணவன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடலூர் நத்தப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் புதுச்சேரி வடுகரையை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்தின்போது 10 சவரன் நகை உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சசிகுமார் துன்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து சிவரஞ்சனி மற்றும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சசிகுமார் அவரது தாய், சகோதரி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.






