உக்ரைனில் ஒரு இந்தியர் உயிரிழப்பு..!
மூளை வாதத்திற்கு சிகிச்சை பெற்று வந்த இந்திய மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
உக்ரைனில் படித்து வந்த பஞ்சாப்பை சேர்ந்த மாணவர் கடந்த ஒரு மாத காலமாக மூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மாணவரின் தந்தை மற்றும் உறவினர்கள் மாணவருடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.






