அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை..!
நடிகர் அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார். வலிமை படம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் 24ஆம் நாள் வெளியானதால் அஜித் அரசியலுக்கு வருகிறார் என்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பேசியதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்புபவரை தடுக்குமாறு ஊடகவியலாளர்களை தாழ்மையுடன் இது போன்று செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் எனவும் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.






