--- --:--:-- --

I LOVE YOU என கூறினால் பாலியல் தொல்லை அல்ல என தீர்ப்பு..!

4

ருவரிடம் தங்களை காதலிப்பதாக கூறுவது குற்றமல்ல. தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம்தான் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 22 வயது வாலிபர் ஒருவர் 17 வயது சிறுமியிடம் பின்தொடர்ந்து சென்று ஐ லவ் யூ என தன்னுடைய காதலை வெளிப்படுத்தி உள்ளார்.

 

இதனால் சிறுமியும், அவரது தாயாரும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

 

இதனை விசாரித்த நீதிபதி ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவரிடம் மற்றொருவர் தன்னுடைய காதலை வெளிப்படுத்துவது தன்னுடைய உணர்வுகளை நாகரீகமான முறையில் வெளிப்படுத்துவது நோக்கத்துடனே எனவும், பாதிக்கப்பட்டவருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து அவர் கூறுவதுதான் சட்டப்படி குற்றம்.

 

குற்றம் சாட்டப்பட்டவர் உள்நோக்கத்துடன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் செய்தால் தான் குற்றம் என கூறி குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை விடுவித்துள்ளனர்.

 

Right Menu Icon