ஆபத்தான பாதையில் குழந்தையை நடக்க வைத்து ரசித்த பெற்றோர்..!
ஆபத்தான பாதையில் குழந்தை நடப்பது போன்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் எந்த செயல் செய்தாலும் அதனை குழந்தையின் பெற்றோர் மட்டுமின்றி அனைவருமே ரசிப்போம்.
தற்போது சமூக வலைதளங்களில் வருகையினால் அனைவரும் குழந்தையின் செயல்களை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் காண்போரின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலும், திகிலூட்டும் விதத்திலும் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ஒரு குழந்தையின் பெற்றோர் ஆன்லைனில் பதிவு பகிரப்பட்ட அந்த வீடியோவில் ஆண் குழந்தை ஒன்று உயரமான ஒரு கட்டடத்தின் விளிம்பில் உள்ள கம்பியை பிடித்து நகர்ந்து நகர்ந்து செல்கிறது. சில அடி தூரம் சென்றதும் தடுமாறி கீழே விழுந்து எழுந்து மறுபடியும் முன் நோக்கி நடந்து செல்கிறது.
அதை பார்ப்போருக்கு அச்சச்சோ குழந்தை கீழே விழுந்தால் என்னவாகும் என்ற அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. சுவரின் விளிம்புகளில் குழந்தை தன் பாதத்தை வைக்கும் பொழுது கரணம் தப்பினால் மரணம் ஏற்படக் கூடும் என்கிற அளவுக்கு காண்போருக்கு இதயத்துடிப்பு அதிகமாகிறது. இது தற்போது வைரலாகி வருகிறது.






