ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..!
ஆன்லைனில் ஐபோன் புரோமாக்ஸ் ஆர்டர் செய்தபோது சோப்பு டப்பாவை அனுப்பிய ஆன்லைன் நிறுவனத்தின் செயல் அதிர்ச்சியை அளித்துள்ளது . வடக்கு லண்டன் பகுதியை சேர்ந்த 42 வயதாகும் பெண் ஒருவர் சமீபத்தில் ஐபோன் ஆர்டர் செய்து இருந்தார்.
அந்த போன் விலை 1500 டால.ர் முன்பணமாக 150 டாலர் தொகையை செலுத்தி, மீத தொகையை தவணை முறையில் மூன்று ஆண்டுகளில் செலுத்தி விடுவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதை தொடர்ந்து அந்த நிறுவனம் ஐபோனை தபால் மூலம் அனுப்ப அந்த போனை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தார்.
இரண்டு நாட்கள் கழித்து அவரது வீட்டிற்கு ஒரு தபால் வந்தது. பேராவலுடன் அந்த பார்சலை பிரித்து பார்த்துள்ளார். ஆனால் அந்த பார்சல் கையை கழுவ பயன்படும் சோப்பு டப்பா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.
ஆர்டர் கொடுத்த நிறுவனத்திடம் புகார் கொடுத்தார். அதை தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் வேறு ஒரு ஐபோன் அளிக்கப்படும் என்று அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.






