5 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டாம்..!
தமிழகத்திலுள்ள 77 சதவீத மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
கொரொனா பரவல் 30 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைந்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் கவசம் அணிய வேண்டாம் என ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக பள்ளியில் ஆய்வு செய்தபோது மாணவர்களுடன் கலந்துரையாடிய ராதாகிருஷ்ணன் தான் யாரென்று மாணவர்களுக்கு கனிவுடன் எடுத்துரைத்தார்.





