--- --:--:-- --

மத்திய பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்..!

1

த்திய பட்ஜெட்டில் முக்கியமாக 20 அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் கரன்சி மூலமாகவும் பணபரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்.

 

இது அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். காவிரி, பெண்ணாறு, கிருஷ்ணா, கோதாவரி நதிகள் இணைப்பு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா மூலம் 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே பதிவு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். எல்ஐசி நிறுவனத்தின் பொது பங்குகள் விரைவில் வெளியிடப்படும். இந்த திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 400 ரயில்கள் பயன்பாட்டிற்கு வரும்.

 

ரசாயனம் இல்லா இயற்கை விவசாயம் நாடு முழுவதும் ஊக்குவிக்கப்படும். விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை 2.37 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும். டிரோன்கள் மூலம் விளை நிலங்களை அளவிடவும் விளைச்சலை கணக்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் 2023 ஆம் ஆண்டுக்குள் 60 ஆயிரம் கோடி மதிப்பில் 18 லட்சம் வீடுகள் கட்டப்படும். 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாநில மொழிகள் ஊக்குவிக்கப்படும். 60,000 கோடி மதிப்பில் 3.8 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

44 ஆயிரம் கோடி ரூபாயில் நீர்ப்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்படும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 1486 பழைய சட்டங்கள் திரும்ப பெறப்படுகிறது.

 

நாட்டில் கல்வி சேவைக்காக தொலைக்காட்சி சேனல்கள் 200 அதிகரிக்கப்படுகிறது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும். சிறு, குறு நடுத்தர தொழில் துறையினரை மேம்படுத்தும் வகையில் புதிய வரிவிதிப்புகள் இருக்காது. வங்கிகளுடன் இணைந்து தபால் துறை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

Right Menu Icon